Latest Updates
-
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன?
சிக்கன் வாங்குனா ஒரு டைம் இப்படி மிளகு வறுவலை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Chicken Pepper Varuval Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்துள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு புது டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு சளி அதிகம் பிடித்திருந்தால், அவர்களுக்கு சிக்கன் மிளகு வறுவலை செய்து கொடுங்கள்.
இந்த மிளகு சிக்கன் வறுவல் நன்கு காரசாரமாக இருப்பதால், சளி முறிந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த சிக்கன் மிளகு வறுவல் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 3/4 கிலோ
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 2 துண்டு
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி நன்கு நீரில்
கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம்,
சோம்பு, பட்டை, கிராம்பு, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி
வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து
நன்கு கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி 10 நிமிடம் நன்கு வேக வைத்து
இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சிக்கன் மிளகு வறுவல்
தயார்.
Image Courtesy: Dindigul Food Court



Click it and Unblock the Notifications