Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
Chicken Liver Fry Recipe In Tamil: பொதுவாக ஈரல் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் பலரும் ஆட்டு ஈரலை தான் அதிகம் சாப்பிடுவார்கள். இருப்பினும் சிக்கன் ஈரலும் ஏராளமான சத்துக்களைக் கொண்டுள்ளது என்பது தெரியுமா? இது தெரியாமல் நிறைய பேர் ஈரலை தூக்கி எறிந்துவிடுகிறார்கள். அதுவும் இந்த சிக்கனை ஈரலை வாங்கி சமைத்து சாப்பிடும் போது, சுவை வேற வெலலில் இருக்கும்.

ஆனால் உங்களுக்கு சிக்கன் ஈரலை ருசியாக செய்யத் தெரியாதா? அப்படியானால் இந்த பக்குவத்தில் சிக்கன் ஈரலை செய்து கொடுங்கள். இப்படி மசாலா பொருட்களை சேர்த்து, மிளகுத் தூள் தூவி வறுவல் செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். இந்த சிக்கன் ஈரலில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. எனவே வாரம் ஒருமுறை சிக்கன் ஈரலை உட்கொள்ளும் போது, உடலில் வைட்டமின் பி12 குறைபாடு வராமல் தடுக்கலாம்.
உங்களுக்கு இந்த சிக்கன் ஈரல் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ஈரல் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* மராட்டி மொக்கு - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சிக்கன் ஈரல் - 1/2 கிலோ
* தண்ணீர் - 1 டம்ளர்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உபுப சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கன் ஈரலை கழுவி சேர்த்து 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 15 நிமிடம்
வேக வைக்க வேண்டும். அப்போது அடிக்கடி மூடியைத் திறந்து கிளறி விட
வேண்டும்.
* ஈரல் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூளைத் தூவி கிளறி,
கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சிக்கன் ஈரல் வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications
