Latest Updates
-
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒருடைம் இப்படி சிக்கன் குழம்பை செஞ்சு பாருங்க.. தெருவே மணக்குற அளவு அட்டகாசமா இருக்கும்...
Chicken Kulambu Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அதுவும் அந்த சிக்கனை காலை, மதியம் என இருவேளைக்கும் பயன்படுத்துமாறு ஒரே குழம்பாக செய்யப் போகிறீர்களா?
அப்படியானால் வழக்கமாக நீங்கள் செய்வது போன்று சிக்கன் குழம்பு செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் சிக்கன் குழம்பை செய்யுங்கள். இப்படி குழம்பு செய்தால், இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சாப்பிடலாம். மசாலா அரைத்து குழம்பு செய்வதால், தெருவே மணக்கும் அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 15 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10-15
* தேங்காய் - 1/4 மூடி
* கசகசா - 1 டீஸ்பூன் அல்லது முந்திரி - 5
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சிக்கன் - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர்ஜாரில் பூண்டு மற்றும் சோம்பு சேர்த்து, அரைத்து
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தேங்காய், முந்திரி,
மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் சுவைகேற்ப
உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் சிக்கன் நீர்விட்டு
வரும் வரை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சிக்கனை கிளறி விட்டு, அரைத்து
வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி குக்கரை மூடி வைத்து 2 விசில் விட்டு
இறக்கி. கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சிக்கன் குழம்பு
தயார்...
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
