Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
சிக்கன் கொத்துக்கறியை வெச்சு இந்த மாதிரி ஒரு மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...
Chicken Keema Masala Recipe In Tamil: இன்று விடுமுறை என்பதால் பலரது வீடுகளில் காலையில் இட்லி, பூரி என்று செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக மட்டன், சிக்கனை வாங்கி சமைப்பார்கள். இன்று உங்கள் வீட்டில் பூரி செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு சிக்கன் சைடு டிஷ் செய்ய திட்டமிட்டிருந்தால், வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவி அல்லது மசாலாவை செய்வதற்கு பதிலாக, சிக்கன் கொத்துக்கறியை வாங்கி மசாலா செய்யுங்கள்.
இந்த சிக்கன் கீமா மசாலா பூரி மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இதுவரை நீங்கள் சிக்கன் கீமாவை செய்ததில்லை என்றால், இன்று கட்டாயம் ட்ரை செய்யுங்கள். இந்த கீமா மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கீமா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 3/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிக்கன் கீமா/கொத்துக்கறி - 1/4 கிலோ
* ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு தூவி நன்கு
வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா, மிளகாய்
தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் சேர்த்து நன்கு 3
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் சிக்கன் கொத்துக்கறியை கழுவி மசாலாவுடன் சேர்த்து, அத்துடன்
ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம்
சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மசாலாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து
வேண்டுமானால் உப்பையும் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து
10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, வெண்ணெய் மற்றும்
கொத்தமல்லித் தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் கீமா மசாலா
தயார்.
Image Courtesy: Sashi Recipes



Click it and Unblock the Notifications
