Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... சிக்கன் கைமா பெப்பர் ப்ரை
Chicken Kaima Pepper Fry Recipe: வார விடுமுறை நாட்களில் நீங்கள் எப்போதும் வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புவீர்களா? அப்படியானால் இந்த வாரம் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்து கொடுங்கள். அது தான் சிக்கன் கைமா பெப்பர் ப்ரை.
இந்த சிக்கன் கைமா பெப்பர் ப்ரை சளி பிடித்திருக்கும் போது சாப்பிட்டால், சளி முழுவதும் கரைந்து வெளியேறும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் கைமா பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கைமா பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கைமா செய்வதற்கு...
* சிக்கன் கைமா - 500 கிராம்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* முட்டை - 1
பிற பொருட்கள்...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 10 (விதைகளை நீக்கியது)
* வெஙகாயம் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் கைமாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்துக்
கொண்டு நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தில் உருட்டிய உருண்டைகளை வைத்து 10 நிமிடம்
வேக வைத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, சிறிது உப்பு தூவி சில
நிமிடங்கள் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்து சில நொடிகள் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள கைமா உருண்டைகளை சேர்த்து, அத்துடன் சீரகத்
தூள், மிளகுத் தூள் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, கொத்தமல்லி
மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிட்டால்,
சுவையான சிக்கன் கைமா பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
