Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
வாழைப்பூவை வெச்சு வடை சுட்டுருப்பீங்க.. ஆனா அத வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்யுங்க.. அள்ளும்...
Chettinad Vazhaipoo Kuzhambu Recipe In Tamil: நீங்க அடிக்கடி வாழைப்பூ வாங்கி சமைப்பீங்களா? எப்பவும் வாழைப்பூ வாங்கினால், அதை வைத்து வடை அல்லது பொரியல் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வாழைப்பூவை வாங்கினால், செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்யுங்கள்.
இந்த செட்டிநாடு வாழைப்பூ குழம்பை, செட்டிநாடு சைவ மீன் குழம்பு என்றும் அழைப்பர். இந்த குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைப்பூ - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, அதை நறுக்காமல், அப்படியே
மோரில் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்த, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்கி, மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள்
சேர்த்து பச்சை வாசனை போக 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு வாழைப்பூவை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி குறைவான தீயில்
வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மசாலா வாழைப்பூவுடன் ஒன்று சேரும்
வரை பிரட்டி விட்டு, 1/2 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, குறைவான தீயில்
வைத்து குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, 2 விசில் விட்டு
இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான செட்டிநாடு
ஸ்டைல் வாழைப்பூ குழம்பு தயார்.
Image Courtesy: cookingfromheart



Click it and Unblock the Notifications
