Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
செட்டிநாடு காளான் மசாலா ரெசிபி... இந்த காளான் மசாலா மட்டன் குருமாவை விட சூப்பரா இருக்கும்... ட்ரை பண்ணுங்க!
Chettinad Mushroom Masala Recipe: தமிழ்நாட்டில் உணவுகள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது செட்டிநாடு உணவுகள்தான். அதனால்தான் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் செட்டிநாடு உணவுகள் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. செட்டிநாடு உணவுகள் என்றாலே சுவையானதாக இருக்கும் என்று மக்களிடையே கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை உள்ளது.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு சிக்கன், மட்டன் போன்ற சைடிஷ்க்கு அடுத்தபடியாக அதிகளவு மக்களால் விரும்பப்படுவது காளான்தான். செட்டிநாடு ஸ்டைலில் காளானை சமைக்கும் போது அதன் சுவை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் டிபன் மற்றும் சாதத்துக்கு அருமையாக இருக்கும் செட்டிநாடு ஸ்டைலில் காளான் மசாலா எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- காளான் - 200 கிராம்
- நறுக்கிய வெங்காயம் - 1
- சீரகம் 1/2 ஸ்பூன்
- எண்ணெய் 50 மில்லி
- கொத்தமல்லி
அரைப்பதற்கு:
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 10 அல்லது 15
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- அன்னாசிப்பூ - 2
- பட்டை - 2
- கிராம்பு - 2
வதக்கி அரைக்க:
- சின்னவெங்காயம் - 1 கப்
- தக்காளி - 3
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 5 பற்கள்
செய்முறை:
- முதலில் தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்
- கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- இதன் மசாலா வாசனை போனதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
- இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசாலா நன்கு கொதித்ததும் நறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
- நறுக்கிய காளான் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- சுவையான செட்டிநாடு காளான் கிரேவி ரெடி. இது சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு சிறந்த சைடிஷாக இருக்கும்!



Click it and Unblock the Notifications
