Latest Updates
-
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
Chettinad Mullangi Kulambu Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் அற்புதமான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அந்த முள்ளங்கியை வைத்து தெருவே மணக்கும் அளவில் ஒரு சுவையான செட்டிநாடு மசாலா குழம்பை செய்யுங்கள்.

முள்ளங்கி பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத காயாகும். பொதுவாக முள்ளங்கியை வைத்து சாம்பார்தான் செய்வார்கள். ஆனால் முள்ளங்கியை வைத்து சூப்பரான குருமா செய்யலாம் என்பது பலரும் அறியாதது. இந்த முள்ளங்கி குருமா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த மாதிரி குழம்பு வைத்துக் கொடுத்தால் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கு செட்டிநாடு முள்ளங்கி குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முள்ளங்கி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
- முள்ளங்கி - 3
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- பிரியாணி இலை - 1
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 15
- பூண்டு - 10 பல்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
செய்முறை:
- முள்ளங்கியை கழுவி, தோலை நீக்கவும். வட்ட வடிவில் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, தனியே எடுத்து வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை கழுவி, தோலுரிக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, இதை ஒரு மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். பட்டை மற்றும் பிரியாணி இலையைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் நறுக்கிய முள்ளங்கித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்த தக்காளி விழுதையும், தேவையான அளவு நீரையும் சேர்த்து கிளறவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பை சேர்த்து கிளறவும். குக்கரை மூடி போட்டு வைத்து அடுப்பைச் சிம்மில் வைத்து, ஒரு விசில் வரும் வரைவேக வைக்கவும். ஆவி முழுமையாக வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும்.
- எண்ணெய் பிரிந்து மேலே வரும் வந்திருக்கும். குழம்பு ரொம்ப தண்ணீராக இருந்தால் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
- அவ்வளவுதான் கொத்தமல்லி இலையால் அலங்கரித்தால் சுவையான செட்டிநாடு முள்ளங்கி மசாலா குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications











