Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மணமணக்கும் ருசியான.. செட்டிநாடு மீன் குழம்பு
அனைவரும் புத்தாண்டை மிகவும் சிறப்பாக கொண்டாட விரும்புவோம். அதில் பலரும் வெளியே சுற்றாமல் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவார்கள். அப்படியானால் செட்டிநாடு மீன் குழம்பை வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.
இந்த வார இறுதியில் புத்தாண்டு பிறக்கிறது. அனைவரும் புத்தாண்டை மிகவும் சிறப்பாக கொண்டாட விரும்புவோம். அதில் பலரும் வெளியே சுற்றாமல் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவார்கள். நீங்களும் அந்த மாதிரி என்றால், அதுவும் நல்ல சுவையான சமையலை சமைத்து சாப்பிட விரும்பினால், அதுவும் அசைவ உணவை சமைத்து சாப்பிட திட்டமிட்டிருந்தால், செட்டிநாடு மீன் குழம்பை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். இந்த மீன் குழம்பானது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மீன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் மீனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைக்க வேண்டும். அதில் எண்ணெய் ஊறி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசாலா பொடிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே மண் சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
