Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செட்டிநாடு நண்டு மிளகு மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சளி, இருமல் பறந்துடும்..
Chettinad Crab Pepper Masala Recipe In Tamil: தற்போது மழை பெய்து காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சளி, இருமல் பிடித்து பாடாய் படுத்துகிறதா? அப்படியானால் அவர்களுக்கு நண்டு வாங்கி சமைத்து கொடுங்கள்.
அதுவும் அந்த நண்டு கொண்டு செட்டிநாடு மிளகு மசாலாவை செய்து கொடுக்கும் போது, அதில் உள்ள மிளகு சளியை முறித்து வெளியேற்றி, நல்ல நிவாரணத்தை அளிக்கும். இந்த செட்டிநாடு நண்டு மிளகு மசாலாவை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு செட்டிநாடு நண்டு மிளகு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு நண்டு மிளகு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* நண்டு - 1 கிலோ
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி தண்டு - சிறிது
செய்முறை:
* முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி தண்டை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள நண்டை சேர்த்து நன்கு கிளறி, அதிக
நீரை ஊற்றாமல் சிறிது நீரை மட்டும் ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து நண்டை கிளறி விட வேண்டும்.
* பின் திறந்து வைத்தவாறு நண்டில் உள்ள நீர் ஓரளவு வற்றும் வரை நன்கு
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு நண்டு மிளகு மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications