Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
10 நிமிடத்தில் ருசியான சீஸ் பாஸ்தா செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சீஸ் பாஸ்தா செய்வது சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.
தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் குழந்தைகளும் வித்தியாசமாக எதையாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சீஸ் பாஸ்தா செய்வது சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சீஸ் பாஸ்தா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீஸ் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா - 250 கிராம்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2-3
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* ஆரிகனோ அல்லது உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1 டீஸ்பூன்
* பால் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1-2 டீஸ்பூன்
* சீஸ் - 1/2 கப் (துருவியது)
* கொத்தமல்லி - 3-4 டேபிள் ஸ்பூன்
* ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உப்பு மற்றும் பாஸ்தாவைப் போட்டு வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, ஆரிகனோ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரைத்த தக்காளியை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு 8-10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பால் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள பாஸ்தாவை உடனே சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி சூடாக பரிமாறினால், சீஸ் பாஸ்தா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
