Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
எப்பவும் ஒரே ஸ்டைலில் சன்னா மசாலாவை செய்யாம.. ஒருமுறை இப்படியும் செஞ்சு பாருங்க...
Channa Masala Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சைடு டிஷ்ஷாக சன்னா மசாலாவை கேட்கிறார்களா? இதுவரை நீங்கள் ஒரே ஸ்டைலில் தான் சன்னா மசாலாவை செய்வீர்களா?
அப்படியானால் இன்று சன்னா மசாலாவை சற்று வித்தியாசமான முறையில் செய்யுங்கள். இந்த ஸ்டைல் சன்னா மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சன்னா மசாலா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொண்டைக்கடலை - 200 கிராம் (நீரில் ஊற வைத்தது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (அரைத்தது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கொண்டைக்கடலையை சுடுநீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரியாணி
இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, தக்காளியில் உள்ள நீர் வற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட்டின்
பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, நன்கு கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 6-7 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கரண்டியால் சிறிது
கொண்டைக்கடலையை மசித்து விட்டு, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான சன்னா மசாலா தயார்.
Image Courtesy: Kannamma Cooks



Click it and Unblock the Notifications
