Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கமகமக்கும்.. கொங்குநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு
Cauliflower Urulai Kuzhambu Recipe: இன்று உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு கொங்குநாடு ஸ்டைலில் காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு செய்யுங்கள்.
இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு அசைவ குழம்பின் சுவையையே தோற்கடித்துவிடும். அந்த அளவில் இது ருசியாக இருக்கும். குறிப்பாக இந்த காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 2
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* புளி - 1/2 இன்ச்
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
பிற பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 500 கிராம்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு, சீரகம், மல்லி, வரமிளகாய், மிளகு, பூண்டு,
கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு, புளியை சேர்த்து, சிறிது
உப்பு தூவி நன்கு நிறம் மாறும் வரை வாக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி,
துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைத்து
மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து 2 நிமிடம்
வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து துண்டுகளாக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து
கிளறி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 10
நிமிடம் உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* பின் துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரை சேர்த்து, அத்துடன் அரைத்த
மசாலாவையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 10
நிமிடம் மிதமான தீயில் வைத்து காலிஃப்ளவரை வேக வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குழம்பு
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
