Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
காலிஃப்ளவரை வெச்சு இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு செம டேஸ்ட்டா இருக்கும்...
Cauliflower Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
இந்த கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யக்கூடிய வகையில் எளிதில் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கிரேவியை எப்படி செய்வதென்றுதெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதில் உப்பு, மஞ்சள்
தூள் மற்றும் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, அதை தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளியைப் போட்டு அரைத்து, அதையும்
வாணலியில் போட்டு சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அதன் பின் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க
வேண்டும்.
* பின்பு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மூடி
வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான காலிஃப்ளவர் கிரேவி தயார்.
Image Courtesy: cookerypark



Click it and Unblock the Notifications











