Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
கேரட் எலுமிச்சை சாதம்
உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவாக சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கேரட் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவாக சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கேரட் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். அதோடு இது சத்தானதும் கூட.

உங்களுக்கு கேரட் எலுமிச்சை சாதம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் எலுமிச்சை சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்மதி அரிசி - 1 கப்
* எலுமிச்சை சாறு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், முந்திரி மற்றும் வேர்க்கடலையைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய கேரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
* பிறகு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளற வேண்டும்.
* அதன் பின் வதக்கியதை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறிவிட்டால், சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications