Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
கேரட் கூட்டு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... கல்யாண வீட்டில சாப்பிடுற மாதிரி அட்டகாசமா இருக்கும்...!
Carrot Kootu Recipe in Tamil: பொதுவாக மதிய சமையலுக்கு என்ன குழம்பு வைப்பது என்ற தீவிர சிந்தனைக்குப் பிறகு அடுத்த பெரிய கவலையாக இருப்பது அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதுதான். பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும்.
பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒரு பொரியல் என்றால் அது கேரட் பொரியல்தான். இது அனைத்து வகையான குழம்புகளுக்கும் பொருந்தக்கூடிய பொரியலாகும். காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய மற்றொரு சுவையான சைடிஷ் கூட்டு. கூட்டு என்றாலே பொதுவாக சுரைக்காய், பூசணிக்காய் போனவற்றில்தான் செய்வார்கள்.

ஆனால் கேரட்டை வைத்தும் சூப்பரான கூட்டு செய்யலாம். இந்த கேரட் கூட்டு சாம்பார், ரசம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சரியான சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் சுவையான கேரட் கூட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- கேரட் - 2
- துவரம் பருப்பு - 50 கிராம்
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- தக்காளி - 1
- சின்ன வெங்காயம் - 5
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- துவரம் பருப்புடன் பெருங்காயம் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், தக்காளி, வெங்காயம் மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கேரட் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும். கேரட் வெந்ததும் அதனுடன் உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாசனை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய கலவை, மற்றும் வேகவைத்துள்ள துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும். கூட்டு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து கூட்டில் சேர்த்து கலக்கி விடவும். சுவையான கேரட் கூட்டு ரெடி.
- இதை சாம்பார் மற்றும் ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications