Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
பசங்க ஸ்கூல் விட்டு வரும் போது கேரட் வெச்சு இப்படி ஒருமுறை செஞ்சு குடுங்க.. செம டேஸ்டியா இருக்கும்..
Carrot Kolukattai Payasam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு நல்ல சத்தான அதே சமயம் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் கொழுக்கட்டைகளை விரும்பி சாப்பிடுவார்களா?
இதுவரை வெறும் பச்சரிசி மாவைக் கொண்டு கொழுக்கட்டை செய்திருப்பீர்கள். ஆனால் கண்களுக்கு நன்மை விளைவிக்கும் கேரட் கொண்டு கொழுக்கட்டை செய்துள்ளீர்களா? ஆம் கேரட் கொண்டு கொழுக்கட்டை செய்து, அதைக் கொண்டு அப்படியே பாயாசம் செய்யலாம் தெரியுமா? இந்த கேரட் கொழுக்கட்டை பாயாசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் கொழுக்கட்டை பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் கொழுக்கட்டை பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செயது சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* கேரட் - 3
* பால் - 1/2 கப்
கொழுக்கட்டைக்கு...
* நெய் - 1 1/2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1/2 கப்
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
பாயாசத்திற்கு...
* பால் - 3 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பிஸ்தா மற்றும் பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் கேரட் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய கிண்ணத்தில் 3
டேபிள் ஸ்பூன் கேரட் பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், அரைத்த கேரட் பேஸ்ட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது கலவையானது நன்கு உருண்டு
திரண்டு வாணலியில் ஒட்டாமல் இருந்தால், மாவு சரியான பதத்திற்தகு
வந்துவிட்டது என்று அர்த்தம். பின் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த மாவை
ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு கையில் நெய்யை தடவி, தயாரித்து வைத்துள்ள மாவை ஒருமுறை கையால்
பிசைந்து, சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி தனியாக ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் பாலை ஊற்றி
நன்கு கொதிக்க விட வேண்டும்.
* பால் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து எடுத்து வைத்துள்ள கேரட்
பேஸ்ட்டை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி,
சர்க்கரை கரைந்ததும், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்த்து நனகு
5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். முக்கியமாக கொழுக்கட்டைகளை
சேர்த்ததும் உடனே கரண்டியைப் போட்டு கிளறி விடாதீர்கள். இல்லாவிட்டால்
கொழுக்கட்டை உடைந்துவிடும். கொழுக்கட்டைகள் தானாக மேலே வரும் போது,
கரண்டியால் கிளறி, பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம் மற்றும் பிஸ்தாவை
சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான கேரட் கொழுக்கட்டை பாயாசம் தயார்.
Image Courtesy: Annapurna



Click it and Unblock the Notifications
