Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
வீட்டுல 3 கேரட் இருந்தா.. கொளுத்தும் வெயிலுக்கு இப்படி ஜில்லுன்னு செஞ்சு குடிங்க..
Carrot Kheer Recipe In Tamil: தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. அடிக்கும் வெயிலுக்கு வீட்டினுள் இருந்தாலே அனல் காற்று காரணமாக அதிக சூட்டை உணர்வதோடு, மிகுந்த தாகத்தையும் உணர நேரிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் நன்கு ஜில்லென்று ஏதாவது சாப்பிட வேண்டும்.
இந்நிலையில் கடைகளில் விற்கப்படும் ஐஸ் க்ரீம், ஜூஸ்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அருமையான பானங்களை தயாரித்து குடித்தால், தாகமும் தணியும், உடலும் குளிர்ச்சியாக இருக்கும் அல்லவா? உங்கள் வீட்டில் கேரட் இருந்தால், அந்த கேரட்டைக் கொண்டு அருமையான சுவையில் ஜில்லென்று கீர் செய்யலாம். இந்த கேரட் கீர் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு கேரட் கீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் கீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு..
* கேரட் - 1/4 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* ஏலக்காய் - 3
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
பிற பொருட்கள்...
* காய்ச்சிய பால் - தேவையான அளவு
* சர்க்கரை - 1/2 கப்
* ஐஸ் கட்டி
* பாதாம்
* ஆப்பிள்
* வாழைப்பழம்
* ஊற வைத்த சப்ஜா விதை
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கேரட்டை குக்கரில் போட்டு, கேரட் மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து குக்கரை மூடி வைத்து, அடுப்பில்
வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும்
குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்த கேரட்டை அப்படியே நீருடன் மிக்சர் ஜாரில் போட்டு
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் காய்ச்சிய ஆற வைத்துள்ள குளிர்ச்சியான பாலை தேவையான அளவு
ஊற்றி, 1/2 கப் சர்க்கரை சேர்த்து, சிறிது ஐஸ் கட்டிகளையும் சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை அப்படியே ஊற்றி, கீர் மிகவும்
கெட்டியாக இருந்தால், தேவையான அளவு குளிர்ச்சியான பால் அல்லது நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் சுவையை அதிகரிக்க, அத்துடன் பொடியாக நறுக்கிய சிறிது பாதாம்,
ஆப்பிள், வாழைப்பழத்தை சேர்த்து, சப்ஜா விதைகள் வீட்டில் இருந்தால்,
அதை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, அதையும் சேர்த்து கலந்தால், சுவையான
கேரட் கீர் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
