Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மலபார் சிக்கன் பிரியாணியை ஒருதடவை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
சஷ்டி விரத ஸ்பெஷல் கடலைப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி பாயசம் வைச்சு பாருங்க - பிரமாதமா இருக்கும் -
25,000 எலிகள் கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில் - இந்த கோவில் எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (15 November 2026-21 November 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும் -
கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! -
திருச்செந்தூர் திருப்பாகம் - சூரசம்ஹாரம் அன்று மறக்காமல் முருகனுக்கு செஞ்சு படைங்க..
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Carrot Javvarisi Halwa Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் அடிக்கடி சாப்பிட ஏதாவது கேட்டு நச்சரிப்பார்களா? அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்வீட் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போது கடைகளில் கண்டதை வாங்கி கொடுக்காமல், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அருமையான ஸ்வீட் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கேரட் மற்றும் ஜவ்வரிசி இருந்தால், அவற்றைக் கொண்டு ருசியான அல்வா செய்யுங்கள். இந்த அல்வாவை ஒருமுறை செய்தால், அடிக்கடி இதை செய்து கொடுக்கச் சொல்வார்கள்.

உங்களுக்கு இந்த கேரட் ஜவ்வரிசி அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் ஜவ்வரிசி அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 3 கப் + தேவையான அளவு
* நைலான் ஜவ்வரிசி - 1/2 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
* முந்திரி - 10 (உடைத்தது)
* பெரிய கேரட் - 2 (துருவியது)
* சர்க்கரை - 1/2 கப் அல்லது 100 கிராம்
* ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1/2 கப் நைலான் ஜவ்வரிசியை
சேர்த்து கலந்து வேக வைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வெந்ததும், அதை இறக்கி, குளிர்ந்த நீரை ஊற்றி அலசி,
வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
10 முந்திரியை உடைத்து சேர்த்து ப்ரை செய்ய வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து, வேக வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* அல்வா பதத்திற்கு வந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, 2 ஸ்பூன்
நெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான கேரட் ஜவ்வரிசி அல்வா
தயார்.



Click it and Unblock the Notifications
