Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
ப்ராக்கோலியை எப்படி செய்றதுன்னு தெரியலையா? அப்ப இப்படி ஒருமுறை பொரியல் செய்யுங்க..
Carrot And Broccoli Poriyal Recipe In Tamil: நீங்கள் மார்கெட் சென்றால் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் காணப்படும் ப்ராக்கோலியை பார்த்துள்ளீர்களா? மற்றவர்கள் அடிக்கடி அதை வாங்குவதை கண்டுள்ளீர்களா? ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாததால், ப்ராக்கோலியை நீங்கள் வாங்குவதில்லையா?
அப்படியானால் அடுத்தமுறை மார்கெட் சென்றால் அதை வாங்கி வந்து செய்யுங்கள். அதுவும் கேரட்டுடன் சேர்த்து பொரியல் செய்யுங்கள். இந்த பொரியல் மிகவும் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் ப்ராக்கோலி பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் ப்ராக்கோலி பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)
* ப்ராக்கோலி - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரில் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும்
ப்ராக்கோலியைப் போட்டு சிறிது நீரை ஊற்றி, உப்பு சேர்த்து பிரட்டி,
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள
காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 10
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, துருவிய தேங்காயை சேர்த்து
நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான கேரட் ப்ராக்கோலி பொரியல்
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
