முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..

Posted By:

Cabbage Potato Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே உங்கள் வீட்டில் காலையில் பூரி, சப்பாத்தி தான் டிபனாக இருக்குமா? இந்த பூரி, சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமாவை தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளதா? அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவியை ஒருமுறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள். முக்கியமாக இந்த கிரேவியை முட்டைக்கோஸ் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Cabbage Potato Gravy How To Make Muttaikose Urulai Gravy

உங்களுக்கு முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்நு கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு..

* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* தக்காளி - 2

தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூட்ன
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ (துருவியது)
* உருளைக்கிழங்கு - 2 (துருவியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்த விழுது
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய முட்டைக்கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, August 22, 2026, 6:30 [IST]
q
Desktop Bottom Promotion