Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Cabbage Besan Sabzi Recipe : முட்டைக்கோஸ் சப்ஜி
வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் முட்டைக்கோஸை சமைத்துக் கொடுக்க நினைத்தால், முட்டைக்கோஸ் சப்ஜி செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் சப்ஜியை சாதத்துடனும் சாப்பிடலாம், சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.
முட்டைக்கோஸ் காய்கறிகளில் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி. சிலருக்கு இதை பச்சையாக சாப்பிட பிடிக்கும். இன்னும் சிலருக்கு முட்டைக்கோஸ் என்றாலே பிடிக்காது. உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் இருக்கிறதா? வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் முட்டைக்கோஸை சமைத்துக் கொடுக்க நினைத்தால், முட்டைக்கோஸ் சப்ஜி செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் சப்ஜியை சாதத்துடனும் சாப்பிடலாம், சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் சப்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் சப்ஜியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* முட்டைக்கோஸ் - 3 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸ், வெங்காயம், கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் முட்டைக்கோஸை சேர்த்து சிறிது நேரம் கிளறி வேண்டும்.
* பிறகு நீரைத் தெளித்து மூடி வைத்து, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* முட்டைக்கோஸ் வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கினால், முட்டைக்கோஸ் சப்ஜி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications