Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
ப்ராக்கோலியை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. சாதம், தோசைக்கு சூப்பரா இருக்கும்...
Broccoli Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி ப்ராக்கோலி வாங்குவீங்களா? இதுவரை ப்ராக்கோலியை நீங்கள் வறுவல், பொரியல் என்று செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ப்ராக்கோலியைக் கொண்டு சாம்பார் செய்துள்ளீர்களா?
ஆம், ப்ராக்கோலியைக் கொண்டும் சாம்பார் செய்யலாம். இந்த ப்ராக்கோலி சாம்பார் சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ப்ராக்கோலி சாம்பார் எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* புளிச்சாறு - 2-3 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 சிறிய துண்டு
* தக்காளி - 1
* வெங்காயம் - 1
* ப்ராக்கோலி - 1
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* பூண்டு - 2-3 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அதை கழுவி குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள்
சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும்
வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து கிளறி, ப்ராக்கோலியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான
அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, ப்ராக்கோலி வேகும் வரை நன்கு
கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ப்ராக்கோலி
சாம்பார் தயார்.
Image Courtesy: betterbutter



Click it and Unblock the Notifications
