Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கத்திரிக்காயை வெச்சு ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...
Kathirikkai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அந்த கத்திரிக்காய் கொண்டு சுவையான, அதே சமயம் சாதம், சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடுமாறு ஏதாவது ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கத்திரிக்காய் கிரேவியை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு கத்திரிக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 8 (நீளவாக்கில் கீறியது)
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1/4 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 20
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 3/4
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* தக்காளி - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் எள்ளு விதைகளை சேர்த்து வறுத்து, வெங்காயத்தில்
முக்கால்வாசியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கி, பின்
தக்காளியை சேர்த்து, நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து 1 நிமிடம்
தோல் சுருங்கும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து
வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சிறிது நீரை
ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, புளிச்சாற்றினை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் கத்திரிக்காயை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 7-8
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் கிரேவி
தயார்.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications
