Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... கத்திரிக்காய் குடைமிளகாய் சப்ஜி
Brinjal Capsicum Sabji: தினமும் மதியம் சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசிப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இன்று மதியம் சாதத்துக்கு உங்கள் வீட்டில் என்ன சைடு டிஷ் செய்ய போகிறீர்கள்? இன்னும் முடிவெடுக்கவில்லையா?
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் மற்றும் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு சப்ஜி செய்யுங்கள். இந்த சப்ஜி மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த சப்ஜி சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருப்பதோடு, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் குடைமிளகாய் சப்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கத்திரிக்காய் குடைமிளகாய் சப்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 2 (நீளத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* பச்சை குடைமிளகாய் - 1 (நீளத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் கத்திரிக்காய் மற்றும் குடைமிளகாயை சேர்த்து சில
நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து கிளறி, மூடி வைத்து, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கத்திரிக்காய்
குடைமிளகாய் சப்ஜி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications