Latest Updates
-
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்! -
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கருணைக்கிழங்கை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் மாதிரி டேஸ்ட்டா இருக்கும்.. -
2 ஸ்பூன் துவரம்பருப்பும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கொங்கு காட்டா குழம்பை செய்யுங்க - செமையா இருக்கும் -
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! -
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?
பிரட் பாயாசம்
உங்கள் வீட்டில் உள்ளோர் பாயாசத்தை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சற்று வித்தியாசமான பாயாசத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு பிரட் பாயாசம் செய்யுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் இனிப்பாக ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பாயாசத்தை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சற்று வித்தியாசமான பாயாசத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு பிரட் பாயாசம் செய்யுங்கள். இந்த பிரட் பாயாசம் மிகவும் சுவையாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பிரட் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் - 3
* பால் - 1 3/4 கப் + 1/4 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிக்ஸ்டு நட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1 பெரிய சிட்டிகை
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, ஒவ்வொரு துண்டையும் நான்கு சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 3/4 கப் பாலை ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பிரட் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் பாயாசம் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.
* இந்த கட்டத்தில் மீதமுள்ள 1/4 கப் பாலை ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து, நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பிரட் பாயாசம் தயார்.
குறிப்பு:
* இந்த பாயாசம் விரைவில் கெட்டியாகிவிடும் என்பதால் அருகில் இருந்து கவனித்து அடுப்பை அணைக்கவும்.
* பிரட் தூளை பாலில் சேர்த்ததும் அளவுக்கு அதிகமாக கொதிக்க விட வேண்டாம். இல்லாவிட்டால் சுவை பாழாகிவிடும்.
* ஒருவேளை பாயாசம் மிகவும் கெட்டியாக இருப்பது போல் தோன்றினால், பாலை சூடேற்றி ஊற்றி கிளறிவிடுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

