Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
வீட்டுல பிரட் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியா இருக்கும்...
Bread Masala Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? அதுவும் காரசாரமாக சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு பிரட் மசாலாவை செய்யுங்கள்.
இந்த பிரட் மசாலா ஒரு நல்ல ஈவ்னிங் ஸ்நாக்ஸாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். பசிக்கும் போது பிரட்டைக் கொண்டு டோஸ்ட் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, இப்படி மசாலா செய்து சாப்பிட்டால், இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 5 (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி கெட்சப் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில்
வைத்து 5 நிமிடம் பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், சீரகம்
சேர்த்து தாளித்து, பின் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்
* பிறகு தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் தக்காளி கெட்சப்பை சேர்த்து கிளறி, பிரட் துண்டுகளை சேர்த்து
நன்கு கிளறி இறக்கினால், சுவையான பிரட் மசாலா தயார்.
Image Courtesy: swathisrecipes



Click it and Unblock the Notifications
