Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
பிரட் சீஸ் பைட்ஸ்
பிரட் சீஸ் பைட்ஸ் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஸ்நாக்ஸ்.
உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் பிரட் டோஸ்ட் செய்து கொடுத்து போர் அடிக்கிறதா? அப்படியானால் இன்று அவர்களுக்கு சற்று வித்தியாசமாகவும், விரும்பி சாப்பிடும் வகையிலும் பிரட் கொண்டு அற்புதமான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். அது வேறொன்றும் இல்லை, பிரட் சீஸ் பைட்ஸ் தான். இந்த பிரட் சீஸ் பைட்ஸ் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஸ்நாக்ஸ்.

இப்போது பிரட் சீஸ் பைட்ஸ் எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: சுவையான... பன்னீர் போண்டா
தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் - 2
* சீஸ் துண்டுகள் அல்லது துருவிய சீஸ்
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4
* பிரட் தூள் - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் தேவையான சதுர சீஸ் துண்டுகளை வைக்கவும் அல்லது தேவையான அளவு துருவிய சீஸ் தூவிக் கொள்ளவும்.
* பின் அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு சோள மாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின் வெட்டி வைத்துள்ள ஒரு பிரட் துண்டை எடுத்து, சோள மாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் சீஸ் பைட்ஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
