Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
வெறும் சப்பாத்திக்கு பதிலா ஒருமுறை சுரைக்காய் வெச்சு இப்படி சப்பாத்தி செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Bottle Gourd Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? எப்போதும் வெறும் சப்பாத்தியைத் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு சப்பாத்தி செய்யுங்கள்.
இந்த சுரைக்காய் சப்பாத்தி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இந்த சப்பாத்தியை கோடைக்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் சூடு குறையும். இந்த சப்பாத்திக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சுரைக்காய் - 300 கிராம்
* இஞ்சி - 3 துண்டு
* பூண்டு - 7-8
* பச்சை மிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
சப்பாத்திக்கு...
* கொத்தமல்லி - ஃ கையளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கோதுமை மாவு - 2 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சுரைக்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்
மற்றும் சீரகம் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த சுரைக்காய் விழுதை சேர்த்து,
அத்துடன் கொத்தமல்லி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, கோதுமை மாவு
சேர்த்து, நீர் சேர்க்காமல் அப்படியே பிசைய வேண்டும்.
* சப்பாத்தி மாவை பிசைந்த பின், மாவு காய்ந்து போகாமல் இருக்க சிறிது
எண்ணெய் தடவி மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அந்த சப்பாத்தி மாவை சிறிது எடுத்து உருட்டி, மெல்லிய
சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் தேய்த்து
வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் தடவி முன்னும் பின்னும்
அவ்வப்போது திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல்
அனைத்து சப்பாத்தி மாவையும் சப்பாத்திகளாக சுட்டு எடுத்தால், சுவையான
சுரைக்காய் சப்பாத்தி தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications
