Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
இட்லி, தோசைக்கு கருப்பு உளுந்தை வெச்சு இப்படி சட்னி செய்யுங்க.. சுவையாவும் இருக்கும்.. சத்தானதும் கூட..
Black Gram Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலை வேளையில் இட்லி, தோசைக்கு ஒரு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது என்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இன்று இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் கருப்பு உளுத்தம் பருப்பு உள்ளதா?
அப்படியானால் அந்த கருப்பு உளுத்தம் பருப்பைக் கொண்டு ஒரு சத்தான மற்றும் ருசியான சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு கருப்பு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கருப்பு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* புளி - 1 துண்டு
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 3 துண்டு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கருப்பு உளுந்தை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், புளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
மிகவும் மென்மையாக அரைத்துவிட வேண்டாம். சற்று கொரகொரவென்றே அரைத்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி
நன்கு கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி
சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கருப்பு
உளுந்து சட்னி தயார்.
Image Courtesy: Archana's Kitchen



Click it and Unblock the Notifications
