Latest Updates
-
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
பாகற்காய் புளிக்காய் செய்வது எப்படி?
மதிய வேளையில் தயிர் சாதத்தை நிறைய பேர் அதிகம் சாப்பிடுவார்கள். அப்படி தயிர் சாதம் சாப்பிடும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்வது என்று யோசித்தால், பாகற்காய் புளிக்காய் செய்து சாப்பிடுங்கள்.
தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இந்நிலையில் மதிய வேளையில் தயிர் சாதத்தை நிறைய பேர் அதிகம் சாப்பிடுவார்கள். அப்படி தயிர் சாதம் சாப்பிடும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்வது என்று யோசித்தால், பாகற்காய் புளிக்காய் செய்து சாப்பிடுங்கள்.

இந்த பாகற்காய் புளிக்காய் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், உடலில் உள்ள புழுக்கள் அழிவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கியமாக பாகற்காயை உங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு இந்த புளிக்காய் செய்து கொடுங்கள், நிச்சயம் சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு பாகற்காய் புளிக்காய் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் புளிக்காய் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய பாகற்காய் - 1
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
* வெல்லம் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாகற்காயை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பாகற்காயை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு 10 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, பாகற்காயுடன் சேர்த்து கிளறினால், சுவையான பாகற்காய் புளிக்காய் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications