Latest Updates
-
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்!
1 பீட்ரூட் இருந்தா... சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி டேஸ்ட்-ல இருக்கும்..
Beetroot Gravy Recipe In Tamil: நைட் டைம்-ல உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒவ்வொரு முறை என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இதுவரை சப்பாத்திக்கு நீங்கள் எத்தனையோ கிரேவியை செய்திருப்பீர்கள்.
ஆனால் பீட்ரூட் வைத்து கிரேவி செய்திருக்கிறீர்களா? என்னது பீட்ரூட் கிரேவியா என்று கேட்கலாம். ஆம், பீட்ரூட் கொண்டு கிரேவி செய்யலாம். இந்த கிரேவி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த கிரேவியை ஒருமுறை செய்தால், வீட்டில உள்ளோர் அடிக்கடி செய்து தர சொல்வார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பீட்ரூட் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 பெரிய துண்டு
* கிராம்பு - 3
* கல்பாசி - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* பீட்ரூட் - 1
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* கரம் மசாலா/சிக்கன் மசாலா/மட்டன் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 4-5
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, ஒருமுறை கிளறி,
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து,
மிதமான தீயில் வைத்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பீட்ரூட் மற்றும் பச்சை பட்டாணியை
சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும். நீங்கள்
அசைவ பிரியர் என்றால், கரம் மசாலாவிற்கு பதிலாக சிக்கன் மசாலா/மட்டன்
மசாலாவை 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி கொதிக்க விட
வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு,
முந்திரி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு
சேர்த்து கிளறி, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான பீட்ரூட் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
