Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
பீன்ஸ், உருளைக்கிழங்கு இருந்தா.. இப்படி அவியல் செய்யுங்க.. சும்மா அல்லும்...
Beans Potato Avial: இன்று மதியம் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அந்த பீன்ஸையும் உருளைக்கிழங்கையும் கொண்டு அட்டகாசமான சுவையில் அவியலை செய்யுங்கள்.
இந்த அவியல் கேரளாவில் மிகவும் பிரபலமானது. மேலும் ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் முக்கியமான ரெசிபியும் கூட. இன்று ஓணம் என்பதால், உங்கள் வீட்டில் ஒரு ஓணம் ரெசிபியை செய்ய நினைத்தால், பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியலை செய்யுங்கள்.

இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இதை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீன்ஸ் உருளைக்கிழங்கு அவியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீன்ஸ் - 15 (சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* உருளைக்கிழங்கு - 3 (சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பீன்ஸ்,
உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 1/2 கப் நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் 15-20 நிமிடம் காய்கறிகளை
வேக வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த தேங்காயை காய்கறிகளுடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் புளி நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்க
வேண்டும்.
* அதன் பின் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய்
எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, அவியலுன் சேர்த்து கிளறினால், சுவையான பீன்ஸ்
உருளைக்கிழங்கு அவியல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications