Just In
- 24 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாசந்தி ரெசிபி : பாரம்பரிய பாசந்தி செய்முறை
இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று இந்த பாசந்தி. இங்கே பாசந்தி எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை படங்கள் மற்றும் வீடியோ மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது.
பாசுந்தி சுவை மிகுந்த நமது நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு வகை ஆகும். இது கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் எல்லா சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது இதை செய்து மகிழ்வர். பாசுந்தி என்பது பாலை பாதியாக சுண்ட காய்ச்சி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய், உலர்ந்த பழங்கள் போட்டு செய்யப்படும் இனிப்பு வகை யாகும்.
இது பொதுவாக எல்லா பண்டிகையின் போது செய்யப்பட்டாலும் குஜராத் கல்யாண நிகழ்ச்சிகளில் இது மிகவும் முக்கியமான இனிப்பு வகையாக உள்ளது.
இந்த ரெசிபியை மிகவும் வேகமாகவும் எளிதாகவும் குறைந்த சமையல் நேரத்திலேயே செய்து விடலாம். எனவே இதை எப்பொழுதும் பார்டி சமயத்திலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மான ஸ்வீட் என்பதால் அவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம். இதை உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் போதும் செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வர். இந்த இனிப்பு கண்டிப்பாக உங்கள் இனிப்பு சுவை தாகத்திற்கு விருந்தாகும்.
சரி வாங்க இதை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை செய்முறை விளக்க படத்துடனும் மற்றும் வீடியோ மூலமும் காணலாம்
பாசுந்தி ரெசிபி வீடியோ
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: ஸ்வீட்ஸ்
Serves: 2
-
க்ரீம் மில்க் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
-
1. நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.
2. பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
3. பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்
4. இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும்
5. பிறகு நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்
6. நன்றாக கலக்கவும்
7. அடுப்பை அணைப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்னாடி ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.
- 1.பால் பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
- 2.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டால் பால் கருகுவதை தடுக்கலாம்
- 3.பாலின் அளவு பாதியாக குறைந்த பிறகு சுகர் சேர்க்கவும். இல்லையென்றால் அது கலவையை கெட்டியாக மாற விடாது
- 4.குங்குமப் பூ சேர்த்து கொண்டால் அழகான சுவையான கலர் கிடைக்கும்.
- பரிமாறும் அளவு - 1கப்
- கலோரிகள் - 398 கலோரிகள்
- கொழுப்பு - 17 கிராம்
- புரோட்டீன் - 14 கிராம்
- கார்போஹைட்ரேட் - 48 கிராம்
- சுகர் - 46 கிராம்
- இரும்புச் சத்து - 1%
- விட்டமின் ஏ - 9%
படிப்படியான செய்முறை விளக்கம் :பாசுந்தி செய்வது எப்படி
1. நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்ற வேண்டும்.
2. பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
3. பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்
4. இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும்
5. பிறகு நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்
6. நன்றாக கலக்கவும்
7. அடுப்பை அணைப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்னாடி ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.