Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
2 வாழைப்பழமும், 1 கப் கோதுமை மாவும் இருந்தா போதும்.. சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்..
Banana Kuzhipaniyaram Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வாழைப்பழமும், கோதுமை மாவும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பணியாரத்தை சுடுங்கள். இந்த பணியாரம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
உங்களுக்கு வாழைப்பழ பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ பணியாரத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த சின்ன வாழைப்பழம் - 2
* நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* சமையல் சோடா - 2 சிட்டிகை
* தேங்காய் எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, கோதுமை
மாவு, அரிசி மாவு, ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி நன்கு
மென்மையாக கட்டிகளின்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடல் சமையல் சோடாவை
சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
குழிகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* பின்பு ஒரு டம்ளரில் அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, பின் அதை
குழிகளில் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, பணியாரத்தை திருப்பி போட்டு,
மொறுமொறுப்பாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான வாழைப்பழ
பணியாரம் தயார்.
Image Courtesy: Palate's Desire



Click it and Unblock the Notifications
