Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
வீட்டுல பாதாமும், பன்னீரும் இருக்கா? இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்..
Badami Paneer Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுத்து அசத்த நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அதே சமயம் உங்கள் வீட்டில் பாதாமும் அதிகம் உள்ளதா? அப்படியானால் பாதாமி பன்னீர் கிரேவியை செய்யுங்கள். இந்த பாதாமி பன்னீர் கிரேவி ஹோட்டலில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்று நன்கு க்ரீமியாக இருக்கும்.

முக்கியமாக இந்த கிரேவி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு பாதாமி பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதாமி பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* பாதாம் - 12-15
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* பால் - 1 கப்
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - சிறிது
செய்முறை:
* முதலில் பாதாமை நீரில் 10-ஸ5 நிமிடம் ஊற வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு
வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கி தனியாக ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் அரைத்த வெங்காயத்தை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா,
சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, தயிரை ஊற்றி
நன்கு கிளறி எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் பாலை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் கொதிக்க
வைத்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கி, பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறினால், சுவையான பாதாமி பன்னீர்
கிரேவி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications