Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
ஒருடைம் பூரிக்கு சிக்கனை வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க... உடனே காலியாயிடும்...
Arachuvitta Chicken Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை அசைவ உணவுகளை சாப்பிட்டு விடுமுறையை கொண்டாடுவோர் அதிகம். நீங்களும் அப்படியா? அதுவும் விடுமுறை நாட்களில் எப்போதும் காலையில் பூரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால், அதற்கு சைடுடிஷ்ஷாக அரைச்சுவிட்ட சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் கிரேவிக்கு மசாலாவை அரைத்து சேர்ப்பதால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு அரைச்சுவிட்ட சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பட்டை - 3 துண்டு
* சின்ன வெங்காயம் - 5
* தேங்காய் - 1/2 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பு,
அன்னாசிப்பூ, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சின்ன வெங்காயம் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி, தேங்காய் பொன்னிறமாகும் வரை வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து,
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன்
மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும்
தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, கிரேவிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து, 25
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கிரேவியைக் கிளறி,
கொத்தமல்லியை மேலே தூவி கிளறினால், சுவையான அரைச்சுவிட்ட சிக்கன்
கிரேவி தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications