Latest Updates
-
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Andhra Tomato Sesame Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சட்னி தான் எப்போதும் சரியான காம்பினேஷனாக இருக்கும். சட்னியில் பல வெரைட்டிகள் இருந்தாலும், தக்காளி சட்னியே பெரும்பாலானோரின் விருப்பமான சட்னியாக இருக்கும். ஏனெனில் இது அரைப்பதற்கும் எளிதானது சுவையானதும் கூட. அப்படிப்பட்ட தக்காளி சட்னியையே பலவாறு சமைக்கலாம். இந்த தக்காளி சட்னியுடன் ஒவ்வொரு பொருளை கூடுதலாக சேர்க்கும் போது அதன் சுவையில் வித்தியாசம் ஏற்படுகிறது.

அந்த வகையில் இன்று நாம் ஒரு வித்தியாசமான தக்காளி சட்னியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த தக்காளி சட்னி செய்வதற்கு சில பொருட்களே போதுமானது. இந்த தக்காளி சட்னியில் வித்தியாசமாக எள் சேர்த்து அரைக்க வேண்டும். இது இந்த சட்னிக்கு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். இப்படி ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது.
உங்களுக்கு இந்த எள் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி - 2
- வர மிளகாய் - 5
- பச்சை மிளகாய் - 1
- புளி - சிறிய துண்டு
- பூண்டு - 4 பல்
- எள் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் எள், புளி, வர மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பூண்டுப் பற்களைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் வைக்கவும். எள் பழுப்பு நிறமாக மாறியதும், அடுப்பை அனைத்து, இதை ஒரு தட்டுக்கு மாற்றவும்.
- பின்னர் அதே கடாயில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து அவை குழைந்து போகும் வரை வதக்கவும்.
- இதை நன்றாக ஆறவைத்து, மென்மையான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சட்னி மீது ஊற்றி கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி எள் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
