Latest Updates
-
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும்
Andhra Style Raw Mango Chutney Recipe in Tamil: தற்போது மாங்காய் சீசன் தொடங்கி விட்டதால, மார்கெட்டுகளில் மாங்காய் குறைவான விலையில் விற்கப்படும். விலை குறைவாக கிடைக்கும் இந்த மாங்காயை வாங்கினால், பெரும்பாலானோர் அதை சாம்பாரிலோ அல்லது பச்சடியாகவோ செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அந்த மாங்காயை வைத்து ஆந்திரா ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம்.

இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இது தவிர இந்த சட்னி கோடைகாலத்தில் கிடைக்கும் கம்மங்கூழ், ராகி கூழ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், வேலைக்கு செல்பவர்கள் சட்டென்று சமையலை முடிக்க இதை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு செய்ய ஏற்றதாக இருக்கும். இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு சாப்பிடும் சுவையில் இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய மாங்காய் - 1 கப்(புளிப்பு இல்லாதது)
- 100 கிராம் வெள்ளை எள்
- 3 பச்சை மிளகாய்
- 1 பூண்டு பல்
- 1 ஸ்பூன் கடுகு, அரைத்தது
- கால் ஸ்பூன் வெந்தயம், அரைத்தது
- கால் ஸ்பூன் மஞ்சள்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலைகள்
- 1 வர மிளகாய்
- 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் எள்ளை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- முதலில் நறுக்கிய பச்சைக் மாங்காய் துண்டுகளுடன் மஞ்சள் மற்றும் சிறிதளவு உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- மாங்காயிலிருந்து சாறு வெளிவந்து, அது மென்மையாகவும் குழைந்த நிலைக்கு மாறும் வரை வேக வைத்து பின்னர் ஆறவிடவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய மாங்காயுடன் அரைத்த எள் பொடி, அரைத்த கடுகு, அரைத்த வெந்தயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, கெட்டியான பசை போன்ற கலவை கிடைக்கும் வரை அரைக்கவும். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
- இந்த பச்சடியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, அவை வெடிக்கும் வரை வறுக்கவும்.
- வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து கிளறவும். இந்தத் தாளிப்பை சட்னியின் மீது ஊற்றி, நன்கு கலக்கவும்.
- இது இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். இதனை 3 முதல் 4 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications