Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல்
உங்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப பிடிக்குமா? அந்த முருங்கைக்காயைக் கொண்டு ஆந்திரா ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப பிடிக்குமா? அந்த முருங்கைக்காயைக் கொண்டு ஆந்திரா ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ரெடியா இருக்கீங்களா? ஏனெனில், கீழே உங்களுக்காக ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்திரா ரெசிபி சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் ரெசிபியின் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அதோடு இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்றும் எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்காய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வறுத்த வேர்க்கடலை- 1/2 கப்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தக்காளியைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசாலாவை வேக வைக்க வேண்டும்.
* பத்து நிமிடம் கழித்து, அதில் முருங்கைக்காயை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* முருங்கைக்காய் நன்கு வெந்ததும், அதில் இருந்து எண்ணெய் வெளிவர ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
