Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவி
Andhra Style Bottle Gourd Gravy: உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் உணவுகள் ரொம்ப பிடிக்குமா? உங்கள் வீட்டில் ஆந்திரா ரெசிபிக்களை அடிக்கடி முயற்சிப்பீர்களா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா?
அப்படியானால் அந்த சப்பாத்திக்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி நாம் வழக்கமாக செய்யும் கிரேவியை விட வித்தியாசமாக இருக்கும். அதே சமயம் இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 2 கப் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* துவரம் பருப்பு - 1 கப் (நீரில் 30 நிமிடம் ஊற வைத்தது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து 10 நொடிகள்
வதக்கி, தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், உப்பு, பச்சை
மிளகாய் மற்றும் சுரைக்காய் சேர்த்து கிளறி வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள துவரம் பருப்பு கழுவி, அதையும் சேர்த்து கிளறி,
2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல்
சுரைக்காய் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
