Latest Updates
-
Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
லன்ச்பாக்ஸிற்கு ஒருடைம் மசாலா தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்.. -
வாழைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதா? பால் குடித்தால் சளி பிடிக்குமா? நம்பிக்கைகளும்.. உண்மையும்.. -
இந்த 4 ராசி சிங்கப் பெண்களை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாதாம் - மகாராணியாக வாழ பிறந்தவர்களாம் இவங்க -
கேஸ் அடுப்பு ஆரஞ்சு நிறத்தில் எரிவதற்கு காரணம் என்ன தெரியுமா? அப்படி எரிஞ்சா என்ன பண்ணனும் தெரியுமா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் உருவான முதல் கம்பெனி எது தெரியுமா? இன்று அந்த கம்பெனியின் மதிப்பு 60,000 கோடியாம் -
1 பீர்க்கங்காயும், 4 முட்டையும் இருந்தா.. இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
காளானும், உருளைக்கிழங்கும் இருந்தா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
Andhra Pudalangai Pachadi Recipe in Tamil: உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? பொதுவாக புடலங்காயை வைத்து கூட்டு, பொரியல் என்று செய்வோம். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு புடலங்காய் சாப்பிட பிடிக்காதா? ஆனால் புடலங்காயை வைத்து வித்தியாசமான சைடிஷை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புடலங்காயுடன் தயிரை சேர்த்து இந்த ஆந்திரா ஸ்டைல் புடலங்காய் பச்சடியை செய்யுங்க.

இப்படி புடலங்காயுடன் தயிர் சேர்த்து செய்யும் போது அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த மாதிரியான புடலங்காய் பச்சடியை செய்தால், யாருமே பிடிக்காது என்று சொல்லமாட்டார்கள். மேலும் கிலோ கணக்கில் செய்தாலும் சாப்பிட்டுவிடுவார்கள். மேலும் இந்த பச்சடியானது சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் புடலங்காய் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா புடலங்காய் பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
செய்முறை:
- 2 கப் நறுக்கிய புடலங்காய்
- ¾ கப் கெட்டியான தயிர்
- 1 ஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- 3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
- 1 வர மிளகாய் (பாதியாக உடைத்தது
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- சிறிது கொத்தமல்லி இலைகள்
- ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- புடலங்காயை நன்றாக கழுவி, ஒரு கத்தியைப் பயன்படுத்தி, அதன் மேலிருக்கும் வெண்மையான தோலைச் சுரண்டி நீக்கிவிடவும்.
- பின்னர் மீண்டும் கழுவி விட்டு புடலங்காயின் உட்புறத்திலுள்ள விதைகள் நீக்கிவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- நறுக்கி வைத்துள்ள புடலங்காயை பிரஷர் குக்கரில் 1 முதல் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து காய்கறி ஆறியதும், அதை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும் இல்லையென்றால் கடைந்து வைத்துக் கொள்ளவும்.
- காய்கறி ஆறியதும், அதை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அல்லது, சமைத்த காய்கறியை அரைக்காமல் அப்படியே பயன்படுத்தலாம்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கடுகு மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்பு துருவிய இஞ்சி மற்றும் வர மிளகாய் சேர்த்து, மணம் வரும் வரை வதக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
- அரைத்து வைத்த புடலங்காயைச் சேர்த்து, அதிகத் தீயில் ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- இது நன்கு ஆறிய பிறகு, தாளித்த பச்சடியைத் தயிர் இருக்கும் பாத்திரத்திற்கு மாற்றி நன்றாகக் கலக்கவும். அதனுடன் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் ஆந்திரா ஸ்டைல் புடலங்காய் பச்சடி ரெடி. இதை சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
