Latest Updates
-
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Andhra Potato Thokku Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அதனாலேயே அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? உருளைக்கிழங்கை எப்போதும் ஒரே மாதிரி வறுவல் அல்லது பொடிமாஸ்தான் செய்வீர்களா? உருளைக்கிழங்கை புது சுவையில் வித்தியாசமாக சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கை முயற்சி செய்து பாருங்க.

இந்த உருளைக்கிழங்கு தொக்கு நீங்கள் வழக்கமாக சாப்பிடும் சாப்பிடும் பொரியல் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த தொக்கு சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த தொக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் உருளைக்குழங்கு தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 உருளைக்கிழங்கு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 சிறிய தக்காளி (நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் சாம்பார் பொடி
- அலங்கரிக்க கொத்தமல்லி இலைகள்
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ½ ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கை நறுக்கி குக்கரில் போட்டு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் அதன் தோலை நீக்கி, சதுர துண்டுகளாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும். ஆனால், உருளைக்கிழங்கு அதிகமாக வெந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, ' கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறியதும், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
- அதன்பின் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியைச் சேர்த்து, அனைத்தும் நன்றாகக் கலக்குமாறு கிளறவும்.
- ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒருமுறை கிளறிவிட்டு, மிதமான தீயில் சமைக்கவும்.
- கலவை நன்றாகக் கொதித்து, அதன் மேல் பகுதியில் எண்ணெய் பிரியத் தொடங்கியதும், உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- கலவை கெட்டியாகும் வரை காத்திருக்கவும். மசாலா பச்சை வாசனை நீங்கி நன்றாக வதங்கும் வரை சில நிமிடங்கள் கிளறவும்.
- நன்றாக கொதித்து தொக்கு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெடி.



Click it and Unblock the Notifications
