Latest Updates
-
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க பணமழையில் நனையப் போறாங்களாம் -
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... ஆந்திரா சில்லி சிக்கன் கிரேவி
Andhra Chilli Chicken Gravy: விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவரது வீட்டிலும் வீடே மணக்கும் வகையில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? எப்போதும் ஒரே மாதிரி சிக்கனை சமைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் இன்று ஆந்திரா சில்லி சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஆந்திரா ரெசிபி என்பதால் இது சற்று காரமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா சில்லி சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா சில்லி சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சில்லி பேஸ்ட்டிற்கு...
* பச்சை மிளகாய் - 8
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 15 பல்
சிக்கன் ஊற வைப்பதற்கு...
* எலும்புள்ள சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* க்ரீன் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
* ப்ளைன் வினிகர் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
கிரேவி செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* தண்ணீர் - 1/2 கப்
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
சோளா மாவு கலவை..
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு
சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த சிக்கனில் மஞ்சள் தூள், சோயா சாஸ், க்ரீன் சில்லி
சாஸ், வினிகர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து, குறைவான தீயில்
வைத்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து அத்துடன் முழு பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளிற, மூடி வைத்து, மிதமான தீயில்
வைத்து 15 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின்பு சிறிது சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் சோள மாவை நீரில் கரைத்து, அதை சிக்கனுடன் சேர்த்து
குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். சோள மாவை
சேர்த்ததும் கிரேவி சற்று கெட்டியாகிவிடும். கிரேவி மிகவும் கெட்டியாக
இருந்தால், சிறிது நீரை ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான ஆந்திரா
சில்லி சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications