Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Ambur Style Soya Chunks Biryani Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் ருசியான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சீரக சம்பா அரிசியும், மீல் மேக்கரும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணியை செய்து பாருங்கள்.

இந்த ஆம்பூர் சோயா பிரியாணி ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான சோயா பிரியாணி சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு ருசியாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம்பூர் சோயா பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சீரகச் சம்பா அரிசி - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 1
- மீல் மேக்கர் - 1 கப்
- அரைத்த மிளகாய் விழுது - 1 ஸ்பூன்
- பூண்டு விழுது - ஒன்றரை ஸ்பூன்
- இஞ்சி விழுது - ஒன்றரை ஸ்பூன்
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - ஒன்றரை கப்
- தயிர் - 3 ஸ்பூன்
- எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
தாளிக்க:
- நெய் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கிராம்பு - 2
- இலவங்கப்பட்டை - 2 இன்ச்
- ஏலக்காய் - 2
செய்முறை:
- முதலில் 6 வர மிளகாயைக் உடைத்து, சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் 4 காஷ்மீரி மிளகாயை ஊறவைத்து அரைத்தால் சாதத்தின் நிறம் மிகவும் அருமையாக இருக்கும்.
- தேவையான அளவு நீர் சேர்த்து, இஞ்சியை மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதேபோல, பூண்டையும் அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
-ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து குமிழ்கள் வந்ததும், சோயா துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். மீல் மேக்கர் தண்ணீரில் ஊறி, இருமடங்கு பெரிதாகும் வரை அப்படியே விடவும்.
- ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் பூண்டு விழுதைச் சேர்க்கவும், பூண்டின் பச்சை வாசனை போனதும், இஞ்சி விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். இவையனைத்தையும் நன்றாகக் கலக்கவும். பின்னர் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
- தக்காளி நன்கு குழைந்து போகும் வரை வதக்கவும். பின்னர் சோயா துண்டுகளைப் பிழிந்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- கடைசியாக புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- தயிர், போதுமான அளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். அது நன்றாகக் கொதிக்க விடவும்.
- சீரக சம்பா அரிசியைக் கழுவி, கொதிக்கும் நீரில் சேர்க்கவும். குக்கரை மூடி குறைந்த தீயில் வைத்து, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
- ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிரஷர் தானாக வெளியேறிய பிறகு சாதம் நன்றாக வெந்திருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். பின்னர் 5 நிமிடம் 'தம்' போடவும்.
- அவ்வளவுதான் சுவையான ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications
