Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பாதாம் சிக்கன்
இந்த வார விடுமுறையில் சிக்கனைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பாதாம் சிக்கன் செய்து சாப்பிடுங்கள்.
நீங்கள் சிக்கன் பிரியரா? விடுமுறை நாட்களில் சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவீர்களா? இந்த வார விடுமுறையில் சிக்கனைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பாதாம் சிக்கன் செய்து சாப்பிடுங்கள். இந்த பாதாம் சிக்கன் சப்பாத்தி, பூரி, புலாவ், பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பாதாம் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதாம் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* தயிர் - 1/2 கப்
* பாதாம் - 15
* முந்திரி - 10
* பச்சை மிளகாய் - 3
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம்/தேங்காய் பால் - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பாதாம், முந்திரி மற்றும் பச்சை மிளகாயை நீரில் 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த முந்திரி பாதாம் விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி, அதன் பின் 1/4 கப் நீரை ஊற்றி குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின்னர் சிக்கன் துண்டுகள் மற்றும் தயிர் சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்பு பிரஷ் க்ரீம்/தேங்கால் பால், சுவைக்கேற்ப உப்பு, தேவையான அளவு நீர், மிளகுத் தூள் சேர்த்து கிளறி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதை இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பாதாம் சிக்கன் தயார்.
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications
