Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Aadi Krithigai Special Appam Recipe In Tamil: ஆடி மாதம் அம்மனை வழிபட ஏற்ற மாதம் மட்டுமல்ல, இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு விஷேசமான நாளாகும். இந்நாளில் முருகனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 06 மற்றும் 07 ஆம் தேதிகளில் வருகிறது. அதாவது கிருத்திகை நட்சத்திரமானது ஆகஸ்ட் 06 ஆம் தேதி மாலையில் தொடங்கி ஆகஸ்ட் 07 ஆம் தேதி மாலைக்கு முன் முடிவடைகிறது.

இதனால் எந்த நாளில் ஆடி கிருத்திகை எப்போது என்ற ஒரு குழப்பம் பலருக்கும் இருக்கும். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் 06 ஆம் தேதி தான் ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. இருப்பினும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஏற்ப இது மாறலாம்.
இந்த ஆடி கிருத்திகை நாளில் முருகனுக்கு நீங்கள் ஒரு ஸ்பெஷலான ரெசிபி செய்து படைக்க நினைத்தால், வாழைப்பழமும், அரிசி மாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு அப்பம் செய்யுங்கள். இந்த அப்பம் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு இந்த ஆடி கிருத்திகை அப்பம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆடி அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
பிற பொருட்கள்..
* வாழைப்பழம் - 1
* அரிசி மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1 ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக
ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பொடித்த 1 கப் வெல்லத்தை சேர்த்து, அதில் 1 1/2
கப் நீரை ஊற்றி வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை
துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் அரிசி மாவு, 1 ஸ்பூன் கோதுமை மாவு, 1 சிட்டிகை
உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பாதி வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து முதலில் கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் மீதமுள்ள வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன்
ப்ரை செய்து வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது
எண்ணெய்/நெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் கொஞ்சம்
கொஞ்சமாக ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால்,
சுவையான ஆடி அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications
