Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?
பெண்கள் கருவுற்ற பிறகு, பல உடல் நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், கர்ப்பகாலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அது குழந்தையையும் பாதிக்கும் என்பதால் தேவையான சத்துகள் மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும்.
அதில் மிக முக்கியமான ஒன்று கண்டிப்பாக சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படி கர்ப்பிணிகள் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது? என்பது குறித்து, இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. கர்ப்ப காலத்தில் சில உணவுப் பொருள்களை அறவே தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
2. அன்னாச்சி, பச்சை பப்பாளி, எள், சோயா பால் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை கரு சுருக்கத்திற்கு வழிவகுக்கும்.
3. அதிக பாதரசம் கொண்ட மீன்களைத் தவிர்க்க வேண்டும்.
4. பொரித்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
5. புகைபிடித்த அல்லது சுட்ட அசைவ உணவுகள் மற்றும் பாதி வேக வைத்த அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
6. மலச்சிக்கலை உண்டாக்கும் கோதுமை மற்றும் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, நாளொன்றுக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
7. கர்ப்பகாலத்தில் அதிக எடை கூடுவது நல்லதல்ல என்பதால் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
8. தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம். எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும். நல்லதே ஆனாலும் அளவுக்கதிகமாகச் சாப்பிடக்கூடாது.
9. பதபடுத்தாத பால் உணவுகளை சாப்பிடக்கூடாது.. பால் கால்சியத்தின் நல்ல மூலமாகவும், புரதங்கள் மற்றும் தாதுக்களை வழங்கவும் உள்ளது. ஆனால், பதப்படுத்தப்படாத பால் அல்லது தயாரிப்புகளில் கவனமாக இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு கடுமையான உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். பிரை, ஃபெட்டா, ப்ளூ சீஸ் மற்றும் சில மெக்சிகன் பாணி சீஸ்கள் போன்ற சில மென்மையான பாலாடைக்கட்டிகளிலிருந்து விலகி இருங்கள்.
10. சமைக்கப்படாத இறைச்சிகள் அல்லது அரைவேக்காடாக உள்ள அசைவ உணவுகளை உண்ணக்கூடாது.. அது உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் ஆபத்தானவையாக இருக்கலாம். அதனால் முட்டையாக இருந்தாலும் கூட நன்றாக வேக வைத்து பின் சாப்பிடுங்கள்..
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை
பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியமான நலன்களைப் பெறலாம். கர்ப்பிணி பெண்கள் உணவு உண்ட பிறகு 15-20 நிமிட அளவிலான நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உணவில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் விதைகள் மற்றும் கொட்டைகளை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளலாம். டீ மற்றும் காபியை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
குறிப்பிட்ட நேரத்தில், சிறிய அளவு உணவை உட்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications