Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
உங்க குழந்தைகள பத்தி சோஷியல் மீடியாவில் நீங்க பகிர்கிறீர்களா? இனிமே அதை பண்ணாதீங்க...ஏன் தெரியுமா?
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் குழந்தைகளை பற்றி தகவல்களை பகிரும் பல கணக்குகள் உள்ளன. அவை அனைத்தும் அந்த குழந்தைகளின் பெற்றோர்களால் உருவாக்கப்பட்டவை. அதில், குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
இந்தக் கணக்குகள் யாவும் தனிப்பட்டவை அல்ல. மேலும் இணையத்தில் ஆயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான மக்களால் பின்தொடரப்படுகின்றன. இன்றைய நாளில் சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையோடு ஓர் அங்கமாகிவிட்டன. தங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

இதில், அவர்களை பற்றிய விஷயங்கள் மட்டுமல்லாது, அவர்களின் குழந்தைகள் பற்றிய தகவல்களையும் பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்கள். உங்கள் குழந்தை மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் பதிவிடுவது பாதுகாப்பானதா? என ஒவ்வொரு பெற்றோரும் யோசிக்க வேண்டும். நீங்களும் உங்கள் குழந்தையை பற்றிய பல விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருபவராக இருந்தால், இக்கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள்.
பெற்றோர்களே பொறுப்பு
ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் வாழ்க்கையை இணையத்தில் எவ்வளவு பகிர்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நாட்களில் நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நாள் பற்றிய ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இதனால், சில தவறான நபர்கள் உங்கள் குழந்தையை பின்தொடர வாய்ப்புள்ளது.
ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் டிஜிட்டல் தடயத்திற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களுக்கு உங்கள் குழந்தையை பற்றி எதை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை மற்றும் அவர்களின் அனுபவங்களை ஒரு பதிவுக்காக குறைக்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பகிர்வின் ஆபத்துகள்
சமூக ஊடகங்களில் உங்கள் குழந்தையை பற்றிய தகவல்களை அதிகம் பகிர வேண்டாம். அந்நியர்கள் அந்த தகவல்களை பின்பற்றி உங்கள் குழந்தையிடம் நெருக்கக்கூடலாம். மோசடி செய்பவர்களின் கைகளில் முக்கியத் தகவல்கள் கிடைக்கும்போது, உங்கள் குழந்தைக்கு ஆபத்துகள் நேரலாம். சமீபகாலமாக இதுகுறித்து பல செய்திகள் வெளியாகி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பு. சமூக ஊடகங்களில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை அதிகமாகப் பகிர்வது அடையாளத் திருட்டு, எதிர்கால பாகுபாடு மற்றும் உங்கள் குழந்தைகளின் தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கும் என்பதை பொற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரு தனிப்பட்ட இடத்திற்கு தகுதியானவர்கள்
ஆன்லைனில் உங்கள் குழந்தைகளைப் பற்றி பேசுவதற்கு முன் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் எல்லா குழந்தைகளும் விளையாடுவதற்கும், குறும்பு செய்வதற்கும், சில தவறுகளைச் செய்வதற்கும், நல்ல விஷயங்களை செய்ததற்காக சிறப்பாக வளருவதற்கும் ஒரு தனிப்பட்ட இடத்திற்கு தகுதியானவர்கள்.
இது வெறும் விளையாட்டை பற்றியது மட்டுமல்ல. எதிர்காலத்திலும் மற்றவர்களின் தேவையற்ற பார்வையில் இருந்து, உங்கள் குழந்தையின் தனிப்பட்ட சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
சமநிலையை அடைவது முக்கியம்
பொதுவாக ஏதேனும் குடும்ப நிகழ்வில் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெரும்பலான மக்கள் சமூக ஊடகங்களில் பகிர்கிறார்கள். இது ஒரு கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. ஆதலால், பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் சமநிலையை அடைய வேண்டும். உங்களை பற்றியும், உங்கள் குழந்தையை பற்றியும் விஷயங்களை பொதுவெளியில் பகிர வேண்டிய அவசியமில்லை.
எல்லைகளை அமைக்க வேண்டும்
சமூக ஊடகங்களில் உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் படங்கள், வீடியோக்கள் அல்லது விவரங்களைப் பகிர்வது பரவாயில்லை, ஆனால் அதிகமாகப் பகிர்வதைத் தடுக்க அல்லது உங்கள் குழந்தையின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துவதைத் தடுக்க எப்போதும் ஒரு எல்லையை வரையறுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆபத்தான, சட்ட விரோதமான அல்லது குற்றமான, அல்லது தங்கள் குழந்தைகளுக்கு இப்போது அல்லது எதிர்காலத்தில் சங்கடம் அல்லது பிற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை காக்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்கள் கடமை.



Click it and Unblock the Notifications
