Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
கருவிலேயே குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!
குழந்தையின் மூளையானது கருவிலேயே வளர ஆரம்பிக்கிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதே கர்ப்பிணிகள் குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிப்பதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும். கருவில் வளரும் குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன.
தாய்மார்கள் அதனைத் தெரிந்து கொண்டு கர்ப்ப காலத்திலேயே அவற்றைப் பின்பற்றினால், நல்ல புத்திசாலியான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். இங்கு பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒமேகா-3 உணவுகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், கருவில் வளரும் குழந்தையின் அறிவுத்திறன் மேம்படும்.

மன அழுத்தம் கூடாது
கர்ப்பணிகள் கர்ப்ப காலத்தில் மன அழுத்தமின்றி இருக்க வேண்டும். மன அழுத்தம் இருந்தால், அது குழந்தைகளின் மன வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

இசை
இசையும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. தாய் எந்த ஒரு சப்தத்தைக் கேட்டாலும், அது குழந்தைக்கும் கேட்கும். எனவே நல்ல இனிமையான இசையை கர்ப்பிணிகள் கேட்பதால், மனம் அமைதியடைந்து, குழந்தையின் அறிவுத்திறன் வளர உதவியாக இருக்கும்.

இதமான தடவல்
கருவில் வளரும் குழந்தைக்கு தாயின் இதமான அரவணைப்பு அவசியம். அதிலும் கர்ப்பிணிகள் அடிக்கடி தங்களது வயிற்றை இதமாக தடவி விடுவதன் மூலம், குழந்தை சௌகரியத்தை உணர்வதோடு, குழந்தையின் மூளை வளர்ச்சியும் ஆரோக்கியமாக தூண்டிவிடப்படும்.

நல்ல புத்தகம்
முக்கியமாக கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தைக் கொள்வது, குழந்தையின் அறிவுத்திறனை மேன்மேலும் அதிகரிக்கும்.

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் வேண்டாம்
ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை குழந்தையின் உடல்நலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இத்தகைய பழக்கங்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications